மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை

குடும்பம் நடத்த மனைவி வராததால் மதுவில் விஷம் கலந்து குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-09-13 19:12 GMT

பெரம்பலூர் மாவட்டம் பாடலூர் அருகே உள்ள ஊத்தங்கால் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 34), கல் உடைக்கும் தொழிலாளி. இவருடைய மனைவி மலர்க்கொடி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் குடும்பத்தகராறு காரணமாக மலர் கொடி தனது கணவரை பிரிந்து 7 ஆண்டுகளாக தனியாக வசித்து வருகிறார்.

இந்தநிலையில் மனைவி குடும்பம் நடத்த வராததால் மனவேதனை அடைந்த சீனிவாசன் கடந்த 10-ந் தேதி சித்தளி கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். இதையடுத்து அப்பகுதி மக்கள் அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சீனிவாசன் நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மருவத்தூர் போலீசார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்