தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-05-11 18:57 GMT

தோகைமலை அருகே உள்ள சுக்காம்பட்டி காலனியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 48). கூலி தொழிலாளி. இவரது மனைவி ராசாத்தி. இந்தநிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்து ராஜேந்திரன் வெளியே சென்றார். பின்னர் வெகுநேரம் ஆகியும் அவர் வீட்டிற்குள் வரவில்லை. இதையடுத்து அவரை உறவினர்கள் வீடு மற்றும் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் நாச்சாகவுண்டம்பட்டியில் உள்ள ஒரு வேப்பமரத்தில் ராஜேந்திரன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தோகைமலை போலீசார் சம்ப இடத்திற்கு வந்து, ராஜேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ராசாத்தி கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து, ராஜேந்திரன் தற்கொைல குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்