தக்கலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
தக்கலை அருகே தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தக்கலை:
தக்கலை அருகே உள்ள முளகுமூடு, கூட்டமாவு பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் ஜோஸ் (வயது44), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ஜஸ்டின் ஜோஸ் மனநலம் பாதிக்கப்பட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் அவரால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்தார். இதில் மனவேதனை அடைந்த அவர் நேற்று அதிகாலையில் வீட்டின் அறையின் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். இதுகுறித்து தக்கலை போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் நெப்போலியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பிணத்தை கைப்பற்றி தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சப் -இன்ஸ்பெக்டர் ஆஷா ஜெபகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.