மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தற்கொலை தக்கலை அருகே பரிதாபம்

தக்கலை அருகே மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-04-08 18:45 GMT

தக்கலை:

தக்கலை அருகே மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுகுடிக்க பணம் தராததால்...

தக்கலை அருகே உள்ள புல்லுவிளையை சேர்ந்தவர் வினு (வயது 38). தொழிலாளியான இவருக்கு புனிதா (35) என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

இந்தநிலையில் சம்பவத்தன்று வேலைக்கு செல்லாமல் இருந்த வினு, மனைவி புனிதாவிடம் மதுகுடிக்க பணம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணம் கொடுக்கவில்லை. பின்னர் இதுதொடர்பாக அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கோபித்துக் கொண்டு புனிதா, மகள்களை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றார். இது வினுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

தொழிலாளி தற்கொலை

இதனால் அவர் திடீரென வீட்டில் உள்ள அறையில் தூக்கில் தொங்கினார். இதற்கிடையே வீட்டை விட்டு வெளியே சென்ற புனிதா மீண்டும் வீட்டுக்கு வந்தார். அங்கு கணவர் வினு தூக்கில் தொங்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனே புனிதா பதற்றத்துடன் வினுவை கீழே இறக்கி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மதுகுடிக்க மனைவி பணம் தராததால் தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்