விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்தார்.

Update: 2023-07-23 19:39 GMT

ராஜபாளையம், 

ராஜபாளையம் அருகே உள்ள திருகோதையாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). சுமை தூக்கும் தொழிலாளியான இவர் தற்போது ராஜபாளையம் பகுதியில் குடியிருந்து வருகிறார். இவருக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ரமேசுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாகவும், இதனை அவரது மனைவி பாக்கியலட்சுமி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்த ரமேஷ் பூச்சி மருந்தை (விஷம்) குடித்தார். உடனே அவரை மீட்டு ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கீழ ராஜகுலராமன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்