பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளி கைது

Update: 2023-05-15 18:45 GMT

கோவை

கோவை கெம்பட்டி காலனி 7-வது தெரு பாரதி நகரை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி உத்ர ஜெயலட்சுமி (வயது39). சம்பவத்தன்று இவரது வீட்டு முன்பு அவரது உறவினர் கலியலிங்கம் என்பவர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி கிருஷ்ணகுமார் (39) வந்தார். அப்போது அவர் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது அவர் கலியலிங்கத்திடம் திடீரென்று தகராறில் ஈடுபட்டார். இதனால் சத்தம் கேட்டு உத்ர ஜெயலட்சுமி வீட்டில் இருந்து வெளியே வந்தார். அவர் தகராறு செய்த கிருஷ்ணகுமாரை கண்டித்தார். இதில் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த கிருஷ்ணகுமார் கத்தியால் உத்ர ஜெயலட்சுமியை குத்த முயன்றார். இதனை அவர் தடுத்த போது அவரது கைவிரலில் காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது கணவர் வெளியே ஓடி வந்தார்.

பின்னர் கிருஷ்ணகுமார் இருவரையும் மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். காயமடைந்த உத்ர ஜெயலட்சுமிக்கு தனியார் மருத்துவமனயைில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் கடைவீதி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணை கத்தியால் குத்திய தொழிலாளி கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்