பால்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம்
மானாமதுரையில் தேவர் ஜெயந்தி விழாவையொட்டி பால்குடம் எடுத்து பெண்கள் ஊர்வலம் சென்றனர்.;
மானாமதுைர,
சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தேவர் ஜெயந்தி விழா ெகாண்டாடப்பட்டது. இதையொட்டி சிவகங்கை ரோட்டில் உள்ள தேவர் சிலைக்கு மானாமதுரை அருகே உள்ள ஏ.விளாக்குளம் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் தங்களது ஊர்களில் இருந்து பால்குடங்களை எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். பின்னர் தேவர் சிலைக்கு பாலாபிஷேகம் செய்தனர்.இதனை தொடர்ந்து சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகளும் நடைபெற்றன. பின்னர் தேவர் சிலை முன்பாக ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டமும் நடைபெற்றது. அதன் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவிற்கான ஏற்பாடுகளை ஏ.விளாக்குளம் கிராமத்தினர் செய்திருந்தனர்.