பெண்கள் முளைப்பாரி எடுத்துச் செல்ல பாதுகாப்பு தேவை-போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

பெண்கள் முளைப்பாரி எடுத்துச் செல்ல பாதுகாப்பு தேவை-போலீஸ் சூப்பிரண்டிடம் மனு

Update: 2023-03-30 18:45 GMT


விருதுநகர் அருகே உள்ள சூலக்கரை தெற்கு தெரு பகுதி மக்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் கொடுத்துள்ள மனுவில், தெற்கு தெரு பகுதியில் உள்ள காளியம்மன் கோவிலுக்கு அப்பகுதியில் உள்ள பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கம் என்றும், இதனை அப்பகுதியில் உள்ள தனிநபர் ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் இடையூறு செயவதுடன் கோவிலையும் பூட்டி சாவியை எடுத்துச் சென்று விட்ட நிலையில் அப்பகுதி மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தெற்கு தெரு காளியம்மன் கோவிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கோரியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்