ஆதிபராசக்தி கோவிலில் பெண்கள் பால்குட ஊர்வலம்

நசரத்பேட்டை ஆதிபராசக்தி கோவிலில் பெண்கள் பால்குட ஊர்வலம் சென்றனர்.

Update: 2023-08-19 07:38 GMT

நசரத்பேட்டை,

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிபராசக்தி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் ஆடி மாத திருவிழாயொட்டி நேற்று பால்குட ஊர்வலம் நடந்தது.

இதில் 2000-க்கும் மேற்பட்ட பெண் பக்தர்கள் செவ்வாடை அணிந்து தலையில் பால்குடங்களை சுமந்து கொண்டு அந்த பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் சென்றனர். இறுதியாக பால் குடங்களை சுமந்து வந்த பெண் பக்தர்களிடம் இருந்து பால் குடங்களை பெற்று அம்மனுக்கு பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் வினாயகர், சிவன், நாகாத்தம்மன், ஆதிபராசக்தி, அங்காளம்மன் உள்ளிட்ட சாமிகள் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டனர்.

மேலும் அம்மன் மற்றும் பத்ரகாளி வேடம் அணிந்து பக்தர்கள் ஊர்வலமாக வந்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க நசரத்பேட்டை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்