திருச்சி:
திருச்சி ஜீயபுரம் அருகே உள்ள திருப்பராய்த்துறை மேலத்தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். ஜோசியர். இவரது மனைவி தனலட்சுமி(வயது 52). இவர் நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள குப்பையை கொட்டுவதற்காக திருச்சி- கரூர் மெயின்ரோட்டில் சாலையை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.