சேத்தியாத்தோப்பு அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு

சேத்தியாத்தோப்பு அருகே மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.

Update: 2022-08-24 16:30 GMT


சேத்தியாத்தோப்பு, 

சேத்தியாத்தோப்பு அடுத்த கிளியனூர் ஊராட்சி பழைய ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மச்சகேந்திரன். இவரது மனைவி வாசுகி (வயது 40). இவர் நேற்று காலை 7 மணிக்கு வீட்டின் பின்புறம் உள்ள மாட்டுகொட்டகைக்கு சென்றார். அப்போது, நேற்று முன்தினம் இரவில் காற்றுடன் பெய்த மழையின் காரணமாக, அங்குள்ள தென்னை மரத்தின் மட்டை ஒன்று, மின்கம்பத்தில் இருந்து வீட்டுக்கு செல்லும் மின்சார வயர் மீது விழுந்ததினால், அந்த மின்சார வயர் அறுந்து கீழே விழுந்து கிடந்தது.

மின்சாரம் தாக்கியது

இதை பார்க்காத, வாசுகி எதிர்பாராதவிதமாக அந்த மின் வயரை மிதித்துள்ளார். இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே வாசுகியை அங்கிருந்தவர்கள் மீட்டு ஒரத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் ஒரத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ,வாசுகியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் காமராஜர் மருத்துவமனைக்கு அ னுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்