விவசாயிகளுடன் அமர்ந்து பெண் கவுன்சிலர் தர்ணா

விவசாயிகளுடன் அமர்ந்து பெண் கவுன்சிலர் தர்ணாவில் ஈடுபட்டார்.

Update: 2023-01-06 18:52 GMT

கிருஷ்ணராயபுரத்தை அடுத்த பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பகுதியில் விவசாயிகள் பலர் ஆடு, மாடுகளை அதிகளவில் வளர்ந்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விவசாயி பாலசுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான ஆடுகளை தெருநாய்கள் கடித்தில் அவை இறந்து விட்டன. இதேபோல் தொடர்ந்து ஆடுகளை நாய்கள் கடித்து வருகிறது. எனவே நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் நேற்று பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சி அலுவலகம் முன்பு 10-வது வார்டு கவுன்சிலர் தேவியுடன் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து, தர்ணாவில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், நாய்களை பிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்