விஷம் குடித்து பெண் தற்கொலை
ஓட்டப்பிடாரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள காசிலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. லாரி டிரைவர். இவரது மனைவி செல்லத்தாய் (வயது 42). இவர் அடிக்கடி தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து புளியம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.