மயிலம் அருகே ஸ்கூட்டரில் புகையிலை பொருட்களை கடத்திய பெண் கைது

மயிலம் அருகே ஸ்கூட்டரில் புகையிலை பொருட்களை கடத்தி வந்த பெண் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-09-01 18:45 GMT

மயிலம், 

மயிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையிலான போலீசார் மயிலம் அடுத்த தழுதாளி பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஸ்கூட்டரை வழிமறித்து போலீசார் சோதனையிட்டதில், 6¼ கிலோ எடையிலான புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஸ்கூட்டரை ஓட்டி வந்த பெண்ணிடம் நடத்திய விசாரணையில், அவர் மயிலம் காந்தி நகரை சேர்ந்த பன்னீர்செல்வம் மனைவி சுசீலா(வயது 40) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஸ்கூட்டரில் கடத்தி வந்தபோது சிக்கியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார், சுசீலாவை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்கள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட ஸ்கூட்டரும் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்