குன்னம்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மேற்பார்வையில் பெரம்பலூர் மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட சாராயம் விற்போர் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் குன்னம் அருகே புதுவேட்டக்குடியில் இருந்து கோவில்பாளையம் செல்லும் சாலையில் உள்ள ஒரு வயலில் மாமரத்தின் அடியில் அரசு அனுமதியின்றி கள் விற்பனை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மதுவிலக்கு போலீசார் அங்கு சென்று கள் விற்ற ஒரு பெண்ணை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் கடலூர் மாவட்டம் கோழியூர் கிராமத்தை சேர்ந்த புனிதா(வயது 52) என்பது தெரியவந்தது. இதையடுத்து மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர், புனிதாவை கைது செய்து 10 லிட்டர் கள்ளை கைப்பற்றினர்.