கஞ்சா வைத்திருந்த பெண் கைது
கஞ்சா வைத்திருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
காரியாபட்டி,
திருச்சுழி அருகே உள்ள கல்லூரணி பகுதியில் கஞ்சா விற்பனை நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருச்சுழி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி தலைமையில் போலீசார் அந்த பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அங்கு மாங்குளம் பகுதியை சேர்ந்த தாடகை நாச்சியார் (வயது 36) என்பவர் நின்று கொண்டிருந்தார். சந்தேகத்தின் பேரில் அவரிடம் போலீசார் சோதனை நடத்தினர் அப்போது அவர் வைத்திருந்த பையில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்ததுடன், தாடகை நாச்சியாரை போலீசார் கைது செய்தனர்.