வாலிபரை கத்தியால் வெட்டிய பெண் கைது
நெல்லை அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய பெண் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே தச்சநல்லூர் கரையிருப்பு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவர் அந்த பகுதியில் புரோட்டா கடை வைத்துள்ளார். இவரது மனைவி கண்ணகி (வயது 40). சம்பவத்தன்று அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (29) என்பவர் மது போதையில் புரோட்டா கடைக்கு சென்று அங்கு தகராறு செய்தாராம். இதில் ஆத்திரம் அடைந்த கண்ணகி, வெங்காயம் வெட்டும் கத்தியால் தினேஷ்குமாரை கையில் வெட்டியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் தச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணகியை கைது செய்தனர்.