சாலை மறியல் போராட்டம் வாபஸ்

சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது

Update: 2022-09-21 19:40 GMT

முசிறியை அடுத்த மேட்டுப்பாளையம் இந்திரா காந்தி குடியிருப்பு பகுதி மக்களுக்கு பட்டா வழங்கக்கோரியும், சாலையை சீரமைக்க கோரியும், பாசன வாய்க்கால் ஆக்கிரமிப்பை அகற்ற கோரியும் தமிழக விவசாயிகள் வாழ்வாதார முன்னேற்ற சங்கம் சார்பாக சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர். இது தொடர்பாக முசிறி தாலுகா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோரிக்கைகள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டன. கூட்டத்தில் அரசு அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்