கோவில்பட்டியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு முகாம்

கோவில்பட்டியில் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு முகாம் இரண்டு நாட்கள் நடக்கிறது.

Update: 2023-08-31 18:45 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி கோட்டத்தில் உள்ள விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் மற்றும் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சிறப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) முதல் 2 நாட்கள் நடக்கிறது. பொதுமக்கள் முகாம் நடைபெறும் இடங்களுக்கு சென்று வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்து பயனடையலாம் என்று கோவில்பட்டி உதவி கலெக்டர் ஜேன் கிறிஸ்டி பாய் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்