வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படுமா?

வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விடப்படுமா?

Update: 2022-06-15 19:54 GMT

  தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா கணபதி அக்ரஹாரம் மணலூர் பகுதியில் உள்ள அய்யனார் கோவில் வாய்க்கால் மற்றும் நந்தி மதகு வாய்க்கால்கள் திறக்கப்படவில்லை. இதனால் குறுவை சாகுபடி செய்ய முடியவில்லை. மேலும் கரும்பு சாகுபடிக்கு போதிய தண்ணீர் வசதி கிடைக்கவில்லை. இதனால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வாய்க்காலுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கையாகும்.

-பொதுமக்கள், மணலூர்

Tags:    

மேலும் செய்திகள்