தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா?

தேங்கி கிடக்கும் குப்பைகள் அகற்றப்படுமா?

Update: 2023-04-26 18:45 GMT

மன்னார்குடி கீழ 2-ம் தெரு பகுதியில் நல்லான் குட்டை குளம் உள்ளது. இந்த குளத்தை சுற்றிலும் கரைகள் இடிந்து செடிகளும், கொடிகளும் அடர்ந்து புதராக காட்சியளிக்கிறது. படிக்கட்டுகளும் சேதமடைந்து பயன்படுத்த முடியாத அளவிற்கு உள்ளது. இந்த குளத்திற்கு தண்ணீர் வரும் வரத்து வாய்க்காலை சீரமைத்தால் குளத்திற்கு நீர் எளிதில் வந்து சேரும். இந்த குளத்தை சுற்றி கரைகள் கட்டி செப்பனிட்டு நீர் தேக்கினால் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதோடு நிலத்தடி நீர் வளமும் பாதுகாக்கப்படும். இந்த குளத்தின் கரைகளில் குப்பைகள் கொட்டப்பட்டு ஆங்காங்கே குப்பைமேடாக காட்சியளிக்கிறது. இதனால் நோய்கள் பரவி சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தின் கரைகளை கட்டி படிக்கட்டுகளை சீரமைத்து, கரைகளில் தேங்கி கிடக்கும் குப்பைகளை அகற்ற வேண்டும். குளத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்