கட்டாரி குளத்தை சூழ்ந்துள்ள ஆகாய தாமரை செடிகள் அகற்றப்படுமா?
பழையபாளையம் கிராமத்தில் உள்ள கட்டாரி குளத்தை சூழ்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொள்ளிடம்:
பழையபாளையம் கிராமத்தில் உள்ள கட்டாரி குளத்தை சூழ்ந்துள்ள ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கட்டாரி குளம்
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பழைய பாளையம் கிராமம் கீழ சன்னதி தெருவில் கட்டாரி குளம் உள்ளது. இந்த பொதுக்குளத்தை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த பகுதியில் உள்ளவர்கள் குளிப்பதற்கும், கால்நடைகளுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த கிராம பகுதியில் நிலத்தடி நீரை பாதுகாக்கும் முக்கிய குளமாக இந்த கட்டாரி குளம் இருந்து வந்தது. இந்த குளம் காட்டேரி குளம் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.
வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பு
இந்த குளத்துக்கு தண்ணீர் வந்து நிரப்பும் வகையில் வாய்க்கால் வசதியும், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் வகையில் வடிகால் வாய்க்கால் வசதியும் இருந்து வந்துள்ளது. ஆனால் காலப்போக்கில் இந்த பொதுக்குளத்தை யாரும் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டதால் குளத்தின் பெரும் பகுதி தூர்ந்து விட்டது. தண்ணீர் வந்து செல்லும் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் குளத்தின் அகலமும் சுற்றுப்பகுதியும் குறைந்துள்ளது. சிறிய குட்டையாக காணப்படுகிறது.
ஆகாய தாமரை செடிகளை அகற்ற வேண்டும்
தற்ேபாது இந்த குளத்தை ஆகாய தாமரை ெசடிகள் சூழ்ந்துள்ளது. இதனால் இந்த குளத்தில் தண்ணீர் செல்ல வழியில்லாமல் உள்ளது. மேலும் இ்ந்த குளத்தை சுற்றி தடுப்புச்சுவர், கம்பிவேலி இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதியில் விளையாடும் குழந்தைகள் குளத்தில் விழும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழையபாளையம் கீழ சன்னதி தெருவில் உள்ள கட்டாரி குளத்தை சூழ்ந்துள்ள ஆகாய தாமரை ெசடிகளை அகற்றி, குளத்தை தூர்வாரி குளத்தை சுற்றி தடுப்புச்சுவர், கம்பி வேலி அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.