மக்காச்சோள பயிர்களை நாசப்படுத்திய காட்டுப்பன்றிகள்

பட்டிவீரன்பட்டி அருகே காட்டுப்பன்றிகள் விளைநிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோள பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன.

Update: 2023-09-01 21:00 GMT

பட்டிவீரன்பட்டி அருகே ரெங்கராஜபுரம், சித்தரேவு, நெல்லூர், கரட்டுப்பட்டி, சிங்காரக்கோட்டை, ஒட்டுப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் விவசாயிகள் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானல் தாலுகா பெரும்பாறை, தாண்டிக்குடி மலைப்பகுதிகளில் இருந்து, வெளியேறும் காட்டுப்பன்றிகள் ரெங்கராஜபுரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து மக்காச்சோள பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் அப்பகுதி விவசாயிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து நெல்லூரை சேர்ந்த விவசாயி ஒச்சப்பன் கூறுகையில், மக்காச்சோள பயிர்கள் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த போது, விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டுப்பன்றிகள் பயிர்களை நாசப்படுத்தியுள்ளன. இதனால் மக்காச்சோளத்தை பயிரிட்ட விவசாயிகள் பெரும் நஷ்டமடைந்துள்ளனர். எனவே விளைநிலங்களுக்குள் காட்டுப்பன்றிகள் புகாமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்