உதயநிதி ஸ்டாலின் உடை விவகாரம்: ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை

கட்சி சின்னம் பொறிக்கப்பட்ட டி-சர்ட் அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு தடை கேட்ட வழக்கில் ஐகோர்ட்டில் விரைவில் விசாரணை நடைபெறுகிறது.

Update: 2024-11-05 01:44 GMT

கோப்புப்படம்

சென்னை,

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தி.மு.க. சின்னம் பொறித்த டி-சர்ட் அணிந்து பொது நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். தலைமை செயலக ஊழியர் ஆடை கட்டுப்பாடு தொடர்பாக தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, தமிழ் கலாசார ஆடையான வேட்டி-சட்டை அல்லது சாதாரண உடை அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் சத்தியகுமார் என்பவர் ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்தநிலையில், இதே கோரிக்கையுடன் வக்கீல் பிரவீண் சமாதானம் என்பவர் சென்னை ஐகோர்ட்டில், பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளில் கட்சி சின்னத்துடன் டி-சர்ட் அணிந்து துணை முதல்-அமைச்சர் கலந்து கொண்டால், அது தி.மு.க. சார்பில் நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சி போல் தோற்றத்தை ஏற்படுத்தும். இதன்மூலம் அவர் கட்சிக்கு ஆதாயம் தேடுகிறார். எனவே, கட்சி சின்னத்துடன் டி-சர்ட் அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு தடை விதிக்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்