சென்னையில் 406 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றம் - மாநகராட்சி நிர்வாகம் தகவல்

சென்னையில் 406 மெட்ரிக் டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Update: 2024-11-05 05:07 GMT

சென்னை,

தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் கடந்த 31-ந்தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து தீபாவளி பண்டிகையின்போது சென்னை மாநகராட்சி பகுதிகளில் சேர்ந்த பட்டாசு கழிவுகளை அகற்றும் பணியில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டனர். இந்த பட்டாசு கழிவுகள் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனியார் தொழிற்சாலைக்கு கொண்டுவரப்பட்டு எரியூட்டி அழிக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி தீபாவளி பண்டிகையின்போது 275 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தீபாவளிக்கு அடுத்த நாளான கடந்த ஒன்றாம் தேதி 92.78 டன் பட்டாசு கழிவுகளும், அதற்கு அடுத்த நாளில் 167.55 டன் பட்டாசு கழிவுகளும், அதனை தொடர்ந்து 146 டன் பட்டாசு கழிவுகளும் அகற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுவரை மொத்தம் 406 மெட்ரிக் டன் எடை கொண்ட பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டு அழிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொழிற்சாலையில் அழிக்கப்படும் பட்டாசு கழிவுகளால் காற்று மற்றும் நிலம் மாசுபடாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்