ஒரே நாடு, ஒரே தேர்தல் விஷயத்தை விஜய் பரிசீலிக்க வேண்டும் - வானதி சீனிவாசன்
ஒரே நாடு, ஒரே தேர்தல் விஷயத்தை திறந்த மனதுடன் விஜய் பரிசீலிக்க வேண்டும் என்று வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.;
கோவை,
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானதி சீனிவாசன் கூறியதாவது:-
விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தி மத்திய அரசிடம் இன்னும் முழுமையாக காலி செய்து ஒப்படைக்கவில்லை. மெட்ரோ ரெயில் திட்டம் தொடர்பாக மாநில அரசு நிறைய தகவல்களை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டி இருக்கிறது.
ஒரே நாடு, ஒரே தேர்தல் குறித்து மக்களிடம் கருத்து கேட்டு அதற்கு என்று அமைக்கப்பட்ட குழு அரசிடம் அறிக்கை கொடுத்திருக்கிறது. இதில் இருக்கும் சாதக, பாதகங்களை அரசியல் கட்சிகள் யோசித்து பார்க்க வேண்டும். விஜய் இதை எதிர்க்கிறார். விஜய்யும் ஒரே நாடு, ஒரே தேர்தல் விஷயத்தை திறந்த மனதுடன் பரிசீலிக்க வேண்டும்.
கோவைக்கு முதல்-அமைச்சர் வருவதால் சாலை போட்டால் நல்லது தான். அடிக்கடி முதல்-அமைச்சர் கோவைக்கு வரவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். அப்படியாவது கோவை மக்களுக்கு சாலை வசதிகள் கிடைக்கும். கோவை நகர வளர்ச்சி குறித்து முதல்-அமைச்சரிடம் வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் கூறினார்.