மனைவி, குழந்தையை எரித்து கொன்ற தொழிலாளி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கம்பம் அருகே மனைவி, குழந்தையை எரித்து கொன்ற தொழிலாளி உள்பட 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

Update: 2022-07-30 16:32 GMT

கம்பம் அருகே உள்ள நாராயணதேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பெரியகருப்பன் (வயது 60). இவருடைய மகன் அருண்பாண்டியன் (29). கூலித்தொழிலாளி. இவரது மனைவி சிவப்பிரியா (25). இந்த தம்பதிக்கு யாசித் என்ற 2 வயது குழந்தை இருந்தது. இந்நிலையில் கடந்த மே மாதம் 24-ந்தேதி சிவப்பிரியாவிடம், மாமனார் பெரியகருப்பன், கணவர் அருண் பாண்டியன் ஆகியோர் சேர்ந்து வரதட்சணை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

அப்போது சிவப்பிரியா மற்றும் குழந்தை யாசித் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்தனர். இதுகுறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியகருப்பன், அருண்பாண்டியன் ஆகிய 2 பேரையும் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே, மாவட்ட கலெக்டரிடம் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் முரளிதரன் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். பின்னர் அந்த உத்தரவை ராயப்பன்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மத்திய சிறை கண்காணிப்பாளரிடம் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்