கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

திருவள்ளூர் மாவட்டத்தில் கோடை வெயில் வாட்டி வந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.;

Update:2023-03-18 13:55 IST

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி வதைத்து வந்தது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பலதரப்பட்ட மக்களும் சுட்டெரிக்கும் வெயிலால் அவதியுற்று வந்தனர். இந்த நிலையில் நேற்று காலையும் கடுமையான வெயில் காணப்பட்டது. நேற்று மதியம் சுமார் 3 மணி அளவில் மெல்ல மெல்ல மேகமூட்டம் சூழ்ந்து திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் திடீரென நல்ல மழை பெய்தது.

கடம்பத்தூர், பேரம்பாக்கம், நரசிங்கபுரம், கூவம், குமாரச்சேரி, இருளஞ்சேரி, மப்பேடு போன்ற சுற்று வட்டாரப் பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது. கோடை காலத்தல் கடும் வெயிலில் அவதிப்பட்டு வந்த பொது மக்களுக்கு இந்த திடீர் மழை காரணமாக உற்சாகம் அடைந்தனர். மழையின் காரணமாக குளிர்ச்சியான காற்று வீசிதை தொடர்ந்து அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இதைபோல் திருத்தணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் பிற்பகலில் திடீரென கோடை மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து பெருக்கெடுத்து ஓடியதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். கோடை மழையை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி மகிழ்ச்சியுடன் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்