விழுப்புரம் பகுதியில் பரவலாக மழை
விழுப்புரம் பகுதியில் பரவலாக மழை பெய்தது.;
வங்கக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை பகுதியில் காணப்பட்ட நிலையில் அது வலுவிழந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து அரபிக்கடல் பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது. இதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமப்புறங்களில் நேற்று காலை முதல் இரவு வரை அவ்வப்போது விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இடையிடையே அவ்வப்போது பலத்த மழையாகவும் கொட்டியது. இதனால் சாலைகளில் தண்ணீர் வழிந்தோடியது. திடீரென பெய்த இந்த மழையினால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காண முடிந்தது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்தனர்.