சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை...!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.;

Update:2023-01-30 07:39 IST

சென்னை,

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், திருவாரூர், தஞ்சை, நாகை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, சோழவரம், செங்குன்றம் சுற்றுவட்டார பகுதிகளில் லேசான மழை பெய்து வருகிறது. அடையாறு, மந்தைவெளி, திருவான்மியூர் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்