காஞ்சிபுரத்தில் அதிகமாக பரவும் காய்ச்சல் - அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக குவியும் மக்கள்
காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 150-க்கும் அதிகமானோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 150-க்கும் அதிகமானோர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதே போல் நாள்தோறும் 160-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு குழந்தைகள் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வரும் 31 குழந்தைகளில் 11 குழந்தைகளுக்கு இன்ஃபுளுயென்சா வைரஸ் தாக்கம் இருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுவதால், அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.