வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு? - கவிஞர் வைரமுத்து

களங்கம் எதற்கு? நிலவை ரசிப்போம் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

Update: 2024-08-18 04:01 GMT

சென்னை,

கருணாநிதியின் நூற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீடு குறித்து கவிஞர் வைரமுத்து வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயத்தை மத்திய அரசு இன்று வெளியிடுகிறது. அதை வரவேற்போம்; வாழ்த்துவோம். காலமெல்லாம் இந்தியை எதிர்த்த கலைஞர் நாணயத்தில் இந்தியா? என்று சில தோழர்கள் வினவுகிறார்கள் அவர்களுக்கு அன்போடு ஒருசொல். இந்தியப் பணத்தாளில் இந்தியோடு தமிழும் விளங்குவதால் அது சமன்செய்யப்படுகிறது ஏற்றுக்கொள்கிறோம்

கலைஞர் நாணயத்திலும் இந்தியோடு, 'தமிழ் வெல்லும்' என்ற கலைஞர் கையெழுத்தும் இடம் பிடித்திருப்பதால் இங்கும் அது சமன்செய்யப்பட்டுவிட்டது. வரலாற்று நிகழ்வில் வசை எதற்கு?. களிப்புறுவோம்; களங்கம் எதற்கு? நிலவை ரசிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்