அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகள் மீது எப்போது விசாரணை? - நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் நாளை முடிவு

அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணை எப்போது? என்று நீதிபதி அறிவிக்க உள்ளார்.

Update: 2024-01-07 15:41 GMT

சென்னை,

சொத்து குவிப்பு வழக்குகளில் இருந்து அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வளர்மதி ஆகியோரை மாவட்ட அளவில் உள்ள சிறப்பு கோர்ட்டுகள் விடுவித்து தீர்ப்பு அளித்தது. அதேபோல, முன்னாள் அமைச்சர்கள் பொன்முடியை, சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலை செய்து வேலூர் சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

இந்த தீர்ப்புகளை எல்லாம் மறுஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். இதை எதிர்த்து பொன்முடி தரப்பில் தாக்கல் செய்த மனுவையும் நீதிபதி நிராகரித்தார். இந்த நிலையில், 3 அமைச்சர்கள், 3 முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுக்கப்பட்ட வழக்குகள் நாளை (திங்கட்கிழமை) நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வருகிறது.

அப்போது, எந்தெந்த வழக்குகளை இறுதிக்கட்ட விசாரணைக்காக எந்த நாட்களில் விசாரணைக்கு எடுக்கலாம்? என்பது குறித்து நீதிபதி முடிவு செய்ய உள்ளார். இதுகுறித்து அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் தரப்புகளின் கருத்துக்களை நீதிபதி கேட்க உள்ளார். அவர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை வைத்து, இந்த வழக்குகளின் இறுதிக்கட்ட விசாரணை எப்போது? என்று நீதிபதி அறிவிக்க உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்