புயல் கரையை கடக்கும்போது மழை அல்லது காற்றில் எது அதிகமாக இருக்கும்?

தற்போது வரக்கூடிய மிக்ஜா புயலும் தென் கிழக்கு வங்கக்கடலில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி தான் நகர்ந்து வருகின்றன.

Update: 2023-12-01 23:45 GMT

சென்னை,

கடந்த 15 ஆண்டுகளில் தமிழக கடற்கரையை நோக்கி வந்து செங்குத்தாக கடந்த சென்ற புயலாக 'தானே' (2011), 'வர்தா' (2016) மற்றும் 'கஜா' (2018) புயல்கள் பார்க்கப்படுகிறது. இந்த 3 புயல்களும் கரையை கடக்கும் போது, அதன் காற்றின் வேகம் வலிமையானதாக இருந்தது. ஆனால் குறைந்த அளவிலேயே மழையை கொடுத்தது.

அதேபோல், கடந்த 20 ஆண்டுகளில் தென் கிழக்கில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையிலும், தென் பகுதியில் இருந்து வடக்கு திசையிலும் நகர்ந்து வந்த 'ஓக்னி' (2006), 'நிஷா' (2008), 'நிவார்' (2020) ஆகிய 3 புயல்கள் காற்றை காட்டிலும் அதிகளவு மழையை தாங்கி வந்து பெய்தன.

அந்த வகையில்தற்போது வரக்கூடிய 'மிக்ஜம்'  புயலும் தென் கிழக்கு வங்கக்கடலில் இருந்து மேற்கு-வடமேற்கு திசையை நோக்கிதான் நகர்ந்து வருகின்றன. அவ்வாறு பார்க்கும்போது, இந்த புயல் நல்ல மழையை கொடுக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்