சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை சென்னைக்கு இடமாற்ற காரணம் என்ன? - அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி

சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை சென்னையில் அமைப்பதற்கான காரணம் என்ன என்று அரசுக்கு ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.;

Update:2023-08-19 08:17 IST

மதுரை,

நெல்லையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசுக்கு கடந்த 2020-ல் சென்னை ஐகோர்ட்டு மதுரைக்கிளை அமர்வு உத்தரவிட்டது. இந்த நிலையில், அரசு கொள்கை முடிவின் அடிப்படையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை சென்னைக்கு மாற்ற முடிவு செய்துள்ளதாகவும், சென்னை மாதவரம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தாக்கல் செய்த புதிய மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதிகள், இதற்கு அதிருப்தி தெரிவித்தனர். சென்னையில் சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தை இடமாற்றம் செய்வதற்கான காரணம் என்ன? என்றும் அனைத்து பல்கலைக்கழகங்களும் சென்னை பகுதியில் அமைந்தால், தென் பகுதி எப்படி வளர்ச்சி அடையும் என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும் சித்த மருத்துவ பல்கலைக்கழக இடமாற்றத்திற்கான காரணம் குறித்து 2 வாரத்திற்குள் அரசு அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.Full View

Tags:    

மேலும் செய்திகள்