நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

அமைச்சர் ஆர்.காந்தி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

Update: 2023-03-26 18:04 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் பன்னியூர் கூட்ரோடு பகுதியில் காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நலத் திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. காவேரிப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமை தாங்கினார்.

சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, அரக்கோணம் தொகுதி எஸ்.ஜெகத்ரட்சகன் எம்.பி. ஆகியோர் கலந்து கொண்டு 110 மாணவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய், தி.மு.க. முன்னோடிகள் 25 பேருக்கு ரூ.5 ஆயிரம், 5 ஏழைப் பெண்களுக்கு தையல் எந்திரம், 5 பேருக்கு சலவை பெட்டி, இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கி சிறப்புரை ஆற்றினனர்.

அப்போது அமைச்சர் காந்தி பேசுகையில் இந்திய அளவில் சிறந்த முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை பாராட்டி வருகின்றனர். கலைஞரை போலவே சிந்தித்து பொதுமக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்கி வருகிறார். பெண்கள் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் மகளிர் சுய உதவி குழுகளுக்கு கடன் உதவி, நீர்நிலைகளை மேம்படுத்தும் பணிகள், வேளாண்மை முன்னேற்றத்திற்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்