பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவி
கடையநல்லூரில் தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
கடையநல்லூர்:
தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி தெற்கு மாவட்டம் கடையநல்லூர் ஒன்றியம் குலையநேரி ஊராட்சி சுப்பையாபுரத்தில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தென்காசி வடக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் செல்லதுரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் கடையநல்லூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், கடையநல்லூர் யூனியன் தலைவர் சுப்பம்மாள் பால்ராஜ், கடையநல்லூர் நகர்மன்ற தலைவர் ஹபிபூர் ரகுமான், கடையநல்லூர் யூனியன் துணை தலைவர் ஐவேந்திரன், மாவட்ட பிரதிநிதி பண்டாரசாமி மற்றும் சுப்பையாபுரம் கிளைக் கழக நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.