சிவகங்கை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு

சிவகங்கை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2023-03-11 18:45 GMT


சிவகங்கை வந்த எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பொதுக்கூட்டம்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள சிவகங்கைக்கு வந்த முன்னாள் முதல்-அமைச்சரும் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு சிவகங்கை நகர் எல்லையில் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணைச்செயலாளர் தமராக்கி கருணாகரன், சிவகங்கை மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்மணி பாஸ்கரன், சிவகங்கை மாவட்ட மகளிர் அணியை சேர்ந்த வெண்ணிலா சசிகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச்செயலாளர் ராமு.இளங்கோவன், கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியர் தாஸ், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் கே.பி.ராஜேந்திரன், கூட்டுறவு சங்கத்தலைவர் சகாய செல்வராஜ், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை இணைச்செயலாளர் மோசஸ், காளையார்கோவில் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் மாதவன், வக்கீல் கே.ஆர். ராஜா, ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்துப்பட்டி பாபு, நகர் மாணவரணி செயலாளர் ராஜபாண்டி, மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை துணைச்செயலாளர் ரமேஷ், சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் தேவதாஸ், ஜெயலலிதா பேரவை மாவட்ட இணைச்செயலாளர் ஆர்.எம்.எல்.மாரி, வடவன்பட்டி போஸ், திருமண வயல் ராஜா அருண்மொழி, மணி, இளையான்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கோபி, துணைச்செயலாளர் ஜேம்ஸ் சேவியர், மாவட்ட வக்கீல் பிரிவு இணைச்செயலாளர்கள் சுப்பிரமணியம், நவநீதன், கண்ணன், மற்றும் சுரேஷ்குமார், கூட்டுறவு சங்கத்தலைவர்கள் மணிமுத்து, நேரு கண்ணன், விவசாய பிரிவு ஒன்றிய செயலாளர் செல்லச்சாமி, நிர்வாகிகள் புதுப்பட்டி சிவா, ரெத்தின ராஜா, செந்தில் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

வரவேற்பு

மேலும் ஊராட்சி மன்ற தலைவர்கள் மணிகண்டன், கார்த்திகை சாமி, சதாசிவம், சத்தியமூர்த்தி, கண்ணன், வேல்முருகன், ராஜேந்திரன், மகேந்திரன், புவனேஸ்வரி கண்ணன், சுமதி சரவணன், விமலா தேவி மணிமுத்து, கோமதி மணிமுத்து, பிரவீனா கண்ணன், சரஸ்வதி முத்துக்குமார், மாவட்ட கழக இணை செயலாளர் கற்பகம் இளங்கோ, காரைக்குடி நகர கழக செயலாளர் மெய்யப்பன், சிவகங்கை நகர் கழக செயலாளர் என்.எம்.ராஜா, தேவகோட்டை நகர மன்ற தலைவர் சுந்தரலிங்கம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், சாக்கோட்டை ஒன்றிய குழு தலைவர் சரண்யா செந்தில்நாதன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணைத்தலைவர் வக்கீல் எறும்புகுடி ராஜா, எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணைச் செயலாளர் தர்மராஜ், இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் வரதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு வரவேற்பு அளித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்