முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு

கீழடி அருங்காட்சியகம் திறப்பு விழாவுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2023-03-05 18:45 GMT

திருப்புவனம், மார்ச்.6-

கீழடி அருங்காட்சியகம் திறப்பு விழாவுக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முதல்-அமைச்சருக்கு வரவேற்பு

தமிழர்களின் நாகரிகத்தை உலகிற்கு பறை சாற்றிய கீழடியில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டு உள்ள பொருட்கள் ரூ.18.42 கோடியில் கட்டப்பட்டு உள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. அந்த அருங்காட்சியகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

முன்னதாக சிவகங்கை மாவட்ட எல்ைலயில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மாவட்ட செயலாளரும், கூட்டுறவு துறை அமைச்சருமான கே.ஆர்.பெரியகருப்பன் தலைமையில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழரசி எம்.எல்.ஏ.

நிகழ்ச்சியில் தமிழரசி எம்.எல்.ஏ. திருப்புவனம் பேரூராட்சி தலைவரும், தி.மு.க. மாவட்ட துணை செயலாளருமான சேங்கைமாறன், பேரூராட்சி துணைத்தலைவர் ரகமத்துல்லாகான், யூனியன் தலைவர் சின்னையா, துணைத்தலைவர் மூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அங்கயற்கண்ணி, ராஜசேகரன், கீழடி ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடசுப்பிரமணியன், துணைத்தலைவர் ராமகிருஷ்ணன், கொந்தகை ஊராட்சி மன்ற தலைவர் தீபலெட்சுமி ஜெயவேல், துணைத்தலைவர் சுந்தர்ராஜன், மடப்புரம் ஊராட்சி மன்ற தலைவர் சபர்மதி பாலபோதகுரு, துணைத்தலைவர் காளீஸ்வரன், ஏனாதி-தேளி ஊராட்சி மன்றதலைவர் நீலமேகம், துணைத்தலைவர் அழகு பிள்ளை குணசேகரன், பொட்டப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் குழந்தி பிச்சை, துணைத்தலைவர் செண்பகவள்ளி, காஞ்சிரங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா ராஜாமணி, துணைத்தலைவர் அய்யம்மாள், தர்மபுத்திரன், திருப்புவனம் கிழக்கு ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் தேளி கோபால், தொழிலதிபர் திருநாவுக்கரசு, பேரூராட்சி செயல் அலுவலர் ஜெயராஜ், கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாளர் கிருஷ்ணன், மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி செயலர்கள், ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இளையான்குடி

இளையான்குடி பேரூர் மற்றும் ஒன்றிய தி.மு.க. சார்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிகளில் தி.முக.வின் இளையான்குடி ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான சுப.மதியரசன், பேரூர் கழகச்செயலாளர், பேரூராட்சி தலைவர் நஜுமுதீன், இளையான்குடி தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஆறு.செல்வராசன், சாலைக்கிராமம் நகர் கழக செயலாளர் நைனா முகம்மது, ஒன்றிய கவுன்சிலர்கள் மலையரசி ரவிச்சந்திரன், செல்வி சாத்தையா, ஒன்றிய மாணவர் அணி அமைப்பாளர் சாமிவேல், கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தமிழ்மாறன், அவைத்தலைவர் ரெகுநாதன், ஒன்றிய துணைச்செயலாளர்கள் ராஜேந்திரன், ஜூலியாள், பொருளாளர் ஆரோக்கியதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட பிரதிநிதிகள் கண்ணன், முத்துக்குமார், குருசாமி, சிவகங்கை மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்கள் சுப.அன்பரசன், சசிவர்ணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் நாசர், மாவட்ட கழகப் பிரதிநிதிகள் செய்யதுகான், முகம்மது யாசின், வக்கீல் முகமது மகாதீர் ஆகியோர் மாவட்ட கழக நிர்வாகிகள், பேரூர் கழக, ஒன்றிய கழக, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்களுடன் இணைந்து வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்