உதயநிதி ஸ்டாலினுக்கு காரிமங்கலத்தில் உற்சாக வரவேற்பு60 அடி உயர பிரம்மாண்ட கம்பத்தில் கொடியேற்றினார்

தயநிதி ஸ்டாலினுக்கு காரிமங்கலத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update:2023-09-26 01:00 IST

தர்மபுரி:

காரிமங்கலத்துக்கு நேற்று இரவு வந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர் 60 அடி உயர பிரமாண்ட கம்பத்தில் கட்சி கொடி ஏற்றினார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சரும், தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தர்மபுரி மாவட்டம் வந்தார். மாவட்ட எல்லையான காரிமங்கலத்தில் அவருக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான பி.பழனியப்பன் தலைமையில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கல் சுப்பிரமணி, டாக்டர் செந்தில்குமார் எம்.பி., முன்னாள் எம்.பி. எம்.ஜி. சேகர், தலைமை செயற்குழு உறுப்பினர் பி.தர்மசெல்வன், மாவட்ட பொருளாளர் எம்.எம். முருகன், பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே. முரளி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்கள் எம்.ஜி.எஸ். வெங்கடேஸ்வரன், ஆர். சிவகுரு, மாவட்டத் துணை அமைப்பாளர் அசோக்குமார் கோவிந்தன், மாநில வர்த்தக அணி துணை செயலாளர் சத்தியமூர்த்தி, மாவட்ட துணை செயலாளர்கள் வக்கீல் ஆ.மணி, உமாசங்கர், ஆறுமுகம், மாவட்ட அவைத்தலைவர் மனோகரன், ஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணன், கோபால், சக்திவேல், பேரூராட்சித் தலைவர் பி.சி.ஆர். மனோகரன், துணை தலைவர் சீனிவாசன், மாணவனின் அமைப்பாளர்கள் பெரியண்ணன், சந்தர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

கொடியேற்றினார்

இந்த வரவேற்பை பெற்றுக் கொண்ட அவர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 60 அடி உயர பிரமாண்ட கப்பத்தில் தி.மு.க. கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் வரவேற்புக்கு நன்றி தெரிவித்து பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்