வார விடுமுறை: சென்னையில் இருந்து 2 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

வார விடுமுறையையொட்டி தமிழகம் முழுவதும் 890 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Update: 2024-09-19 04:48 GMT

சென்னை,

தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வார விடுமுறை நாட்களை கருத்தில் கொண்டு, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 20-ந் தேதி (வெள்ளிக்கிழமை) 260 பேருந்துகளும், 21-ந் தேதி (சனிக்கிழமை) 260 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர். பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 20-ந் தேதி வெள்ளிக்கிழமை 65 பேருந்துகளும் 21-ந் தேதி சனிக்கிழமை அன்று 65 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது. மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

விழுப்புரம், சிதம்பரம், திருவண்ணாமலை ஆகிய இடங்களுக்கு மாதவரத்தில் இருந்து 20-ந் தேதி 20 பேருந்துகளும், 21-ந் தேதி 20 பஸ்களும் என சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும், ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்