நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற சபதம் ஏற்போம்

நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற சபதம் ஏற்போம் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

Update: 2023-03-15 19:52 GMT


விருதுநகர் சட்டமன்ற தொகுதியின் சார்பில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா விருதுநகரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.ஆர். சீனிவாசன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கழக கொள்கை பரப்புச் செயலாளர் முன்னாள் துணைவேந்தர் சபாபதி மோகன், அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் ஓடிக்கொண்டே இருக்கிறார். உங்கள் நலனுக்காக உழைத்துக் கொண்டு இருக்கிறார். கொரோனா பாதிப்பு காலத்தில் அவர் ஆற்றிய பணி மகத்தானது. வெள்ளம் வந்த நேரத்தில் மற்ற முதல்-அமைச்சர்கள் போல ஹெலிகாப்டரில் சென்று பார்க்கவில்லை. களத்தில் நின்றார். கொங்கு மண்டலம் எங்களுக்கு தான் என்று கூறிவந்தவர்களுக்கிடையே கரிகால் பெருவளத்தான் போன்று சுற்றி வந்த பகையை வென்று வாகை சூடி உள்ளார். வர இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் மதசார்பற்றகூட்டணி வெற்றி பெற நாம் அவரது பிறந்த நாள் கூட்டத்தின் போது சபதம் ஏற்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக நகர செயலாளர் எஸ்.ஆர்.எஸ். தனபாலன் வரவேற்றார். முடிவில் நகர சபை தலைவர் மாதவன் நன்றி கூறினார். கூட்டத்தில் நகர, ஒன்றிய மற்றும் பிற அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்