'வெறுப்பும், பிரிவினையும் நம்மை அழிக்க அனுமதிக்க முடியாது' - அரியானா வன்முறை குறித்து மு.க.ஸ்டாலின் ட்வீட்
கலவரக்காரர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
அரியானாவில் நடந்த வன்முறையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் கலவரக்காரர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரியானா அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"அரியானாவில் சமீபத்தில் நடந்த வகுப்புவாத வன்முறையில் உயிரிழந்தவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். உண்மையான பலம் என்பது அமைதி, அகிம்சை மற்றும் இணக்கமான சகவாழ்வில் உள்ளது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். வெறுப்பும், பிரிவினையும் நம்மை அழிக்க அனுமதிக்க முடியாது.
கலவரக்காரர்களுக்கு எதிராக எந்தவித பாரபட்சமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கவும், விரைவில் இயல்பு நிலையை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் திறம்பட தடுக்கப்படுவதை உறுதி செய்யவும் அரியானா அரசை நான் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.