நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கம்பத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது

Update: 2022-08-14 14:35 GMT

முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் விதியை கைவிட கோரி நாம் தமிழர் கட்சி சார்பில் கம்பம் காந்தி சிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு தேனி மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயபால் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், தேனி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பிரேம்சந்தர், கம்பம் தொகுதி தலைவர் தங்கப்பாண்டி, நகர செயலாளா் மதன்சதிஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசு பேபி அணையை பலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், முல்லைப்பெரியாறு அணையில் ரூல்கர்வ் விதியை மத்திய அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்