நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
வேலூரில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
வேலூர் அண்ணாகலையரங்கம் அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சுமதிகபிலசன் தலைமை தாங்கினார். வேலூர் மாவட்ட செயலாளர் தினேஷ்குமார், வேலூர் தொகுதி செயலாளர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர் அபுபக்கர், மாநில குருதி கொடை பாசறை ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், உரிமையை தர மறுக்கும் மத்திய அரசை கண்டித்தும் கோஷமிட்டனர். இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.