கத்தி முனையில் ரூ.15 லட்சம் வழிப்பறி

கத்தி முனையில் ரூ.15 லட்சம் வழிப்பறி செய்யப்பட்டது.

Update: 2023-05-04 18:45 GMT

கீழக்கரை, 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் கட்டக்கடா பகுதியை சேர்ந்தவர் நவாஸ்(வயது 45). இவர் பாம்பன் பகுதியில் இருந்து மீன்களை மொத்தமாக வாங்கி சென்று திருவனந்தபுரம் மார்க்கெட்டில் சிறு வியாபாரிகளுக்கு விற்று வருகிறார். இந்நிலையில் மீன்கள் கொள்முதல் செய்வதற்காக ரூ.15 லட்சத்துடன் நேற்று முன்தினம் திருவனந்தபுரத்தில் இருந்து பாம்பனுக்கு காரில் வந்தார். நேற்று அதிகாலையில் ஏர்வாடி இதம்பாடல் துணை மின் நிலையம் அருகே வந்தபோது 2 மோட்டார்சைக்கிளில் வந்த 5 பேர் காரை வழி மறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி நவாசிடம் இருந்த ரூ.15 லட்சத்தை பறித்து சென்றனர். இதுகுறித்து அவர் ஏர்வாடி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். 

Tags:    

மேலும் செய்திகள்