கோடைகாலம் நெருங்குவதையொட்டி தர்பூசணி பழங்கள் குவிந்தன

கரூரில், கோடைகாலம் நெருங்குவதையொட்டி தர்பூசணி பழங்கள் விற்பனைக்காக வந்து குவிந்துள்ளன.

Update: 2023-02-17 18:51 GMT

தர்பூசணி பழங்கள்

கோடைகாலம் நெருங்குவதையொட்டி வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இப்போது இருந்தே பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி பழங்களை பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர்.

தர்பூசணி பழங்கள் கரூரில் பல்வேறு இடங்களில் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. கரூரில் சுங்க கேட், தாந்தோணிமலை, ஈஸ்வரன் கோவில் வீதி, பஸ் நிலையம், ஜவகர் பஜார் உள்பட பல்வேறு இடங்களில் தர்பூசணி குவித்து வைக்கப்பட்டு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

விற்பனை அமோகம்

மேலும் நகரின் பல இடங்களில் சரக்கு வேன்கள், தள்ளுவண்டிகளில் மூலமாகவும் தர்பூசணி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. ஆந்திர மாநிலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வரவழைக்கப்பட்ட இந்த தர்பூசணி பழங்களின் விலை ஒரு கிலோ ரூ.20 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

தர்பூசணி பழம் ஒரு தட்டு ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடைகாலம் நெருங்கி வருதால் தாகத்தை தணிக்க குறைந்த விலையில் கிடைக்கும் தர்பூசணி பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். இதனால் தர்பூசணி பழங்களை வியாபாரிகள் வாங்கி குவித்து விற்பனை செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்