அதிராம்பட்டினத்தில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்

அதிராம்பட்டினத்தில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை மும்முரம்

Update: 2023-04-02 20:12 GMT

சுட்டெரிக்கும் வெயிலால் அதிராம்பட்டினத்தில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

சுட்டெரிக்கும் வெயில்

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கோடைக்காலத்தையொட்டி தினமும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் வெயிலில் வெளியே செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கி கிடக்கின்றனர். வெளியே செல்பவர்கள், வாகனஓட்டிகள் வெயில் கொடுமையில் இருந்து தங்களை தற்காத்து கொள்வதற்காக ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள கடைகளில் விற்கும் தர்ப்பூசணி பழங்கள், இளநீர், குளிர்பானம், நுங்கு உள்ளிட்ட பொருட்களை வாங்்கி பருகி வருகின்றனர்.

இதில் தண்ணீர் சத்து அதிக உள்ள தர்ப்பூசணி பழங்களை பொதுமக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

தர்ப்பூசணி பழங்கள் விற்பனை

அதிராம்பட்டினத்தில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டுள்ளன. இதனை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர். இந்த பழத்தில் அதிகமாக தாதுக்கள், வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், இரும்புசத்து ஆகியவை உள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உடல்சூட்டை தணிக்க தர்ப்பூசணி பழங்களை ெ்பாதுமக்கள் வாங்கி செல்கின்றனர். இதனால் நாகுடி, அறந்தாங்கி, புதுக்கோட்டை ஆகிய பகுதியில் இருந்து தர்ப்பூசணி பழங்களை வியாபாரிகள் வாங்கி வந்து அதிராம்பட்டினத்தில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அதிராம்பட்டினம் பஸ் நிலையம், காலேஜ் முக்கம், சேர்மன் வாடி, பெரிய மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தர்ப்பூசணி பழங்கள் விற்பனை மும்முரமாக நடைபெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்