ரூ.13½ லட்சத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

திருவள்ளூர் உளுந்தை கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு விழா நடைபெற்றது.

Update: 2022-10-06 11:35 GMT

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் உளுந்தை கிராமத்தில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 2 இடங்களில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு உளுந்தை ஊராட்சி மன்ற தலைவரும், கடம்பத்தூர் ஒன்றிய ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவருமான எம்.கே.ரமேஷ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தொழில் அதிபர் ராஜரத்தினம் கலந்து கொண்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் 2 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களை திறந்து வைத்து பொதுமக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்தார். அவருடன் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சந்தானம், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வசந்தா, ஊராட்சி செயலாளர் முனுசாமி மற்றும் வார்டு உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் கோபால், பிரகாஷ், கதிர்வேல், தமிழ்ச்செல்வன், பன்னீர், மேகவர்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்