1,822 கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.1903.94 கோடியில் திட்டம்

ரூ.84 கோடியில் வைகை கரையை சீரமைக்கவும், 1,822 சிறிய கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.1903.94 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-05-27 19:18 GMT

ரூ.84 கோடியில் வைகை கரையை சீரமைக்கவும், 1,822 சிறிய கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.1903.94 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினார்.

திறப்பு விழா

மதுரை வைகை ஆற்றின் குறுக்கேரூ.84 கோடியில் வைகை கரையை சீரமைக்கவும், 1,822 சிறிய கிராமங்களுக்கு குடிநீர் வழங்க ரூ.1903.94 கோடி மதிப்பிலான திட்டத்திற்கும் அமைச்சர் கே.என். நேரு அடிக்கல் நாட்டினார். ஓபுளாபடித்துறையில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழா நேற்று நடந்தது. அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன் முன்னிலை வகித்தனர். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலர் ஷிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் தட்சிணாமூர்த்தி, நகராட்சி நிர்வாக இயக்குனர் பொன்னையா, பேரூராட்சிகள் இயக்குனர் கிரண் குர்ராலா, கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத் சிங், கூடுதல் கலெக்டர் சரவணன், மேயர் இந்திராணி, வெங்கடேசன் எம்.பி., கோ.தளபதி எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் அமைச்சர் கே.என். நேரு கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். மேலும் அவர், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, திட்டபணிகளை தொடங்கி வைத்தார். அதன்படி உசிலம்பட்டி நகராட்சிக்கு ரூ.73 கோடியில் வைகை அணையில் இருந்து குடிநீர் கொண்டு வரும் திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. ஓபுளாபடிதுறையில் ரூ.23 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலம் திறந்து வைக்கப்பட்டது. மாவட்டத்தில் 3 கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன. இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 1,822 சிறிய கிராமங்கள் பயன்பெறும். அதன் திட்ட மதிப்பீடு ரூ.1903.94 கோடி ஆகும்.

பள்ளிக் கட்டிடங்கள்

பின்னர் விழாவில் அமைச்சர் கே.என். நேரு பேசியதாவது:- மதுரை மாநகராட்சியில் மட்டும் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.188.22 கோடி மதிப்பீட்டில் சாலை பணிகள், ரூ.2.22 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள், ரூ.21.74 கோடியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு வாகனங்கள், ரூ.15.31 கோடியில் எல்.இ.டி. தெரு விளக்குகள், ரூ.347.83 கோடியில் குடிநீர் பணிகள், ரூ.52.28 கோடியில் நீர்நிலைகள் மேம்பாட்டு பணிகள் என மொத்தம் ரூ.717. 10 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலூர், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி ஆகிய நகராட்சிகளில், ரூ.27.25 கோடியில் சாலை பணிகள், ரூ.7.87 கோடியில் மழைநீர் வடிகால் பணிகள், ரூ.2.38 கோடியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளுக்கு வாகனங்கள்.ரூ.9.02 கோடியில் எல்.இ.டி. தெரு விளக்குகள் என மொத்தம் ரூ.95.04 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கூவம் ஆறு

மதுரை மாவட்டத்தில் உள்ள 9 பேரூராட்சிகளில் சாலை, மழைநீர் வடிகால், எல்.இ.டி. தெரு விளக்குகள் என மொத்தம் ரூ.107.46 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆறுகளில் கழிவு நீர் கலக்காமல் தடுத்து தூய்மையாக பராமரிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அடையாறு, பக்கீம், கூவம் போன்ற ஆறுகளில் கழிவு நீர் கலக்காமல் தடுத்திடும் வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்துதல் போன்ற பணிகளுக்காக திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. வைகை ஆற்றில் கழிவு நீர் கலக்காத வகையிலும் நடவடிக்கைகள் எடுக்க திட்ட அறிக்கை தயாரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அமைச்சர் நேரு, மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்ற 10 பணியாளர்களுக்கு ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் ஓய்வூதிய பணப்பலனுக்கான ஆணைகளை வழங்கினார். 

Tags:    

மேலும் செய்திகள்